காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சண்டை : 5 வீரர்கள் காயம், தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு

பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2-வது நாளாக துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்து வரும் நிலையில் ஸ்ரீநகரில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அடுத்த முஜ்கண்ட் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியின் எதிரே இருக்கும் வீட்டில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டை சுற்றி வளைத்தனர்.

இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. நேற்று மாலை முதல் தொடரும் துப்பாக்கிச் சண்டையில் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்தநிலையில் பயங்கரவாதிகள் பிறரை தொடர்பு கொள்வதை தடுக்கும் விதமாக ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

((ஸ்ரீநகர், காஷ்மீர்

தொடரும் துப்பாக்கிச் சண்டையால் பதற்றம்

5 வீரர்கள் காயம், தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு

Exit mobile version