காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் முடிவால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு, இந்தியா மட்டுமல்லாது உலகமே உள்ளதாக கூறினார். காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழி வாங்கியதாக மோடி குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்த கருத்து உருவாகி இருப்பதாகவும், முழு சக்தியுடன் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் முடிவால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.