ஹாங்காங்கில் மீண்டும் வெடித்த போராட்டத்தால் பதற்றம்

ஹாங்காங்கில் அரசுக்கெதிராக நடைபெற்று வரும் போராட்டம் வலுத்துள்ளதால் நாடு முழுவதும் போர் களம் போல் காட்சியளித்து வருகிறது.

ஹாங்காங்கில் கைது செய்யப்படும் கிரிமினல் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்தி வழக்கு விசாரணையை சந்திக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், அவ்வப்போது கலவரங்களும் வெடித்து வருகிறது. கடந்த 24ஆம் தேதி குவாங் டோங்க் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடியும் நடத்தினர். வார இறுதியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த போராட்டமானது தற்போது வாரநாட்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் மீண்டும் ஹாங்காங்கில் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது.

Exit mobile version