தென் பெண்ணையாற்றின் குறுக்கே, அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
தென் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் பல முக்கிய வாதங்கள் முன் வைக்கப்பட்டன. தென் பெண்ணையாறு தமிழகத்தில் பெரும் பகுதிகளில் ஓடுவதால், கர்நாடக அரசு எப்படி உரிமை கோர முடியும் என தமிழக அரசு வாதிட்டது. நதி நீர் சட்ட விதிகளை மீறி தென் பெண்ணையாற்றில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது. கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சி தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.