ரகசியமாக வந்து தீர்மானங்களில் கையெழுத்திடும் திமுக மாவட்ட கவுன்சிலர்! தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டங்களில் நடப்பது தான் என்ன?

tenkasi collector office

தென்காசியில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்திற்கே வராத திமுக மாவட்ட கவுன்சிலரிடம் ரகசியமாக தீர்மானத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் திமுக தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் நிதி ஒதுக்கீட்டில், தலைவர், துணைத் தலைவர் மட்டும் அதிகளவில் நிதியை ஒதுக்கிக்கொண்டு மற்ற கவுன்சிலர்களுக்கு குறைந்த நிதியை ஒதுக்குவதால், பொதுமக்களிடையே தங்களுக்கு மிகப்பெரிய அவப்பெயர் உண்டாவதாக கூறினார்.

நீண்ட நேரம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தமிழ்செல்வியின் கணவர் போஸ் உள்ளிட்டோர் ஒவ்வொருவராக அழைத்து தனித்தனியாக பேசி தீர்மானத்தில் கையொப்பம் வாங்கினார். அப்போது கூடத்துக்கே வராத திமுக கவுன்சிலர் பூங்கொடி என்பவரும் ரகசியமாக வந்து கையெழுத்திட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது போன்று அடிக்கடி நடப்பதை விடியா அரசின் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

Exit mobile version