பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை, விவசாயிகள் கொண்டு செல்லும் நிலையில், விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரிகளின் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை, விற்பனை கூடத்திற்கு வெளியே, வெட்டவெளியில் வைக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், திடீரென பெய்து வரும் கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். விடியா திமுக அரசும் அதன் அதிகாரிகளும் அலட்சியமாக செயல்பட்டதால், தங்களது நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version