திருவாரூரில் பேய் மழை..1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்!

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 80ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பா பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி, பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 4 நாட்களாக காவிரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, வயல்களில் தண்ணீர் தேங்கி, அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட் அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version