ராமநாதபுரத்தில் பள்ளியில் பாடம் எடுத்த தற்காலிக ஆசிரியர்கள் மிரட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சின்னக்கடை அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அங்கு வந்த சிலர், அவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. வகுப்புகள் நடத்துவதால் ஆசிரியர்களின் போராட்டம் வீணாகி விடும் என்று கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் தூண்டுதலின் பேரில் மிரட்டுவதாக தற்காலிக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.