தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த ஆசிரியர்கள்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த மாதம் துவங்க உள்ள பொதுத்தேர்வு பாதிக்காத வகையில் தற்காலிக ஆசிரியர்களை விரைவில் நியமிப்பதற்காக முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் திங்கட்கிழமை முதல் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version