கோயில், ஊர் நிர்வாகம் வரவு, செலவு கணக்கில் இரு தரப்பினரிடையே மோதல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதிலில் 12 வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் செந்தாமரைவிளை பகுதியில் கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் நிர்வாகத்தில் வரவு, செலவு கணக்கு பார்ப்பதில் பழைய நிர்வாக தரப்பினருக்கும், புதிய நிர்வாக தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது. இது குறித்து குரும்பூர் காவல் நிலையத்தில் சில வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 வீடுகள் சூறையாடப்பட்டதுடன், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குரும்பூர் காவல்துறையினர் 26 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து 2 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கு நடைபெற்ற மோதல் சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version