சத்தியமங்கலம் அருகே கோயிலின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய வழக்கில் மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சத்தியமங்கலத்தையடுத்த தயிர்பள்ளம் கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம் மற்றும் தங்க தாலியை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
காலையில் கோயிலுக்கு வந்த பூசாரி கோயில் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.