சூரிய கிரகணத்தில் திறக்கப்பட்ட திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில்

சூரிய கிரகண நிகழ்வையொட்டி, கோவில்களின் நடைகள்  அடைக்கப்படுவது வழக்கம். ஆனால் , திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது.

காலை 9 மணி முதல் 11 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்வதையொட்டி, அனைத்து கோவில்களின் நடைகளும் அடைக்கப்படுகின்றன. இந்த நிலையில், பிரசித்தி பெற்ற திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் நடை அடைக்காமல் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வானூர் அருகேயுள்ள இக்கோவிலில் மாதாந்திரம் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் ஜோதி தரிசனத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சூரியகிரகண நிகழ்வையொட்டி  வக்கிரகாளியம்மன் கோவில் நடை திறந்திருக்கிறது.  

Exit mobile version