மெக்ஸிகோவில் கொரோனா பரவலின் காரணமாக மூடப்பட்ட 'டெம்ப்லோ மேயர் புராதன கோயில்' திறக்கப்பட்டது

மெக்ஸிகோ நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள டெம்ப்லோ மேயர் எனப்படும் இடிபாடுகளுடன் கூடிய பிரமீடு வடிவிலான புராதன கோயில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

14ஆம் நூற்றாண்டில் மெக்ஸிகோவை ஆட்சி செய்த ஆஸ்டெக்குகளால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகும்.

வரலாற்று சின்னமான இந்தக் கோயிலை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வந்த நிலையில், கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்டது.

தொற்று கட்டுப்படுத்த நிலையில் தற்போது இக்கோயில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version