திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா

மதுரை திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து கோயிலில் பட்டாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக சர்வ அலங்காரத்துடன் முருகர் மற்றும் தெய்வானை பெரிய தேரில் எழுந்தருளினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுக்க கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி தேர் வலம்வந்தது.

தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

Exit mobile version