பரமக்குடி முத்தால பரமேஸ்வரி கோவில் திருவிழா

பிரசித்தி பெற்ற பரமக்குடி முத்தால பரமேஸ்வரி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள முத்தால பரமேஸ்வரி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 11 நாட்களுக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் தேரோட்டம், பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்தல் போன்ற வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர். இத்திருவிழாவின் கொடியேற்ற விழா இன்று காலை நடைபெற்றது. கொடியேற்ற விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து அம்மனை வழிபட்டனர்.

Exit mobile version