திருவண்ணாமலை ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலயத்தின் 48ம் ஆண்டு மகாபாரத நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலயத்தின் 48ம் ஆண்டு மகாபாரத நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்திம் 48ம் ஆண்டு மகாபாரத நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான படுகளமும் பின்பு தீமிதி விழாவும் நடைபெற்றது . மகாபாரத நாடகம், வில் வளைப்பு, துரோபதை துகில் பகடை, அர்ஜுனன் தபசு, கீச்சகன் சம்மாரம், கிருஷ்ணன் தூது, அரவாண் கடபலி, கர்ணமோட்சம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான படுகளம் அதன் பின்பு தீமிதி விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version