திருவாரூர் மாவட்டம் கடுவங்குடி சுந்தரேஸ்வர சுவாமி ஆலயத்தில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
நன்னிலம் அடுத்த கடுவங்குடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வர சுவாமி ஆலயத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது. சித்ராபௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட சித்திரை திருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வாணவேடிக்கைகளுடன் நடைபெற்ற தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.