கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய கோயிலில் மார்கழி தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை சிறப்பாக நடைபெற்றது.
மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் சிவன், பிரம்மா, விஸ்ணு ஆகிய மூன்று கடவுள்களும் ஒரே கருவறையில், ஒரே சிலையில் அருள்பாலிக்கும் சுசீந்திரம் தாணுமாலய கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோயிலின் மார்கழி தேர்த் திருவிழா கடந்த ஜனவரி 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை சிற்பாக நடைபெற்றது. இதில் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சிங்காரி மேளம், முத்துக்குடை பவனி, சிவன், பார்வதி என பல தெய்வங்களில் வேடமணிந்த குழந்தைகள் பல்லக்கிற்கு முன் ஆடிபாடி சென்றது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.