திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
பூலோக வைகுண்டம் என்றும் பெரிய கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருநாள் திருத்தேர் விழாவிற்கு, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 22 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தநிலையில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று துவங்கி அடுத்த மாதம் 5 ஆம் தேதி நிறைவடையும் இந்த விழாவில், மே மாதம் 3ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 28 ஆம் தேதி மாலை கருட சேவையும், மே2 ஆம் தேதி காலை வண்டலூர் சப்பரமும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு சித்திரை திருத்தேர் நிகழ்ச்சியும், 5 ஆம் தேதி ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.