சிங்கம்புணரி செகுட்டு அய்யனார் கோவில் புரவியெடுப்பு திருவிழா

சிங்கம்புணரி அருகே அருள்மிகு செகுட்டு அய்யனார் கோவில் வைகாசி திருவிழாவில் புரவியெடுப்பு ஏராளமானோர் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றினர்.

சிவகங்கை தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் உள்ள செகுட்டு அய்யனார் கோவில் முழுவதும் இயற்கை அரணாக மூலிகை செடி மற்றும் மரங்களால் அமையப்பெற்றதாகும். இங்கு பிரத்திபெற்ற புரவியெடுப்பு நிகழ்வு நடைபெற்றது. பலூன் மற்றும் வண்ணமயமாக அலங்காரம் செய்யபட்ட 230 வேண்டுதல் புரவிகளும், ஒரு அரண்மனை புரவியும் சூரக்குடி மந்தையிலிருந்து எஸ்.கோவில்பட்டியில் உள்ள செகுட்டையனார் கோவிலுக்கு பக்தர்கள் எடுத்துச்சென்றனர். முன்னதாக சூரக்குடியில் மந்தையில் வைக்கப்பட்ட புரவிகளுக்கு பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதில் கருப்பன சாமியாடியின் சாமியாட்டம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Exit mobile version