திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள ரிஷபேஸ்வரர் கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செங்கத்தில் உள்ள அனுபாம்பிகை, ரிஷபேஸ்வரர் கோயிலில், மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், தாயருக்கும், பிரோதோஷ வழிபாட்டு மன்ற அறக்கட்டளை சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அந்த வகையில், சுவாமிகளுக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு மூலிகை திரவங்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்கார, தீபாராதனையும் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில், சுற்றுவட்டார கிராமக்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.