செங்கம் பெருமாள் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கருடசேவை விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள பெருமாள் கோவிலில் கருடசேவை விழா விமரிசையாக நடைபெற்றது.

ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி ஆலயத்தில் கடந்த 14ம் தேதி ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாளான இன்று மகா கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. காலை ஆறு மணி அளவில் கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், கோபுர தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக கருடசேவை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்து வருகின்றனர்.

Exit mobile version