சேலம் அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் குதிரை நடனத்துடன் கூடிய ஆராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மன்னார்பாளையம், எம். பாலப்பட்டி அருகே உள்ள ஐயப்பன் கோயில் மூன்றாமாண்டு பிரதிஷ்டா விழாவும், உற்சவமூர்த்தியான மணிகண்ட சுவாமிக்கு ஆராட்டு விழாவும் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கணபதிஹோமம், கோமாதா பூஜை, அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மணிகண்ட சுவாமிக்கு ஆராட்டு விழா புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணிகண்ட சுவாமியை வரவேற்கும் விதமாக குதிரை நடனம், கருப்பண்ணசுவாமி அலங்காரத்தில் நடன ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.