சேலம் மாவட்டம் ஆத்தூர் முத்துமாரியம்மன் கோயில் விழாவில் ஏராளமானோர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆத்தூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தி வந்தனர். 20 அடி நீளமுள்ள அலகு குத்தி பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். ஆத்தூர் உடையார் பாளையத்தில் இருந்து கடைவீதி, லீ பஜார், காமராஜர் ரோடு வழியாக கோயிலை வந்தடைந்தனர். அலகு குத்தி செல்லும் பக்தர்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post