விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டு தோறும் தை அமாவாசையில் அங்காளம்மன் தாலாட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, சன்னதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதை அடுத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வடக்கு வாசல் வழியாக எழுந்தருளிய அங்காளம்மன் மேளதாளங்கள் முழங்க தாலாட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திர, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் கடும் பனியையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.