மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியான இன்று, மதுரை மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் காட்சி அளித்தனர்.
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் சிவனை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் அஷ்டமி சப்பரம் வீதியுலா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வர் எழுந்தருளிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மீனாட்சி அம்மன் தனியே எழுந்தருளிய மற்றொரு தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.