மேலூர் அருகே, புரவி எடுப்பு விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தமங்கலம் ஹரிஹரபுத்திர சாத்தைய்யனார் கோயிலின் வைகாசி மாதப் புரவி எடுப்பு விழாவில், பக்தர்கள் மண்குதிரைகளை சுமந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதற்காக மலம்பட்டி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர், பாரம்பரியமாக மண்குதிரைகளை தயாரித்து வழங்குகின்றனர். பின், அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரம், 67-க்கும் மேற்பட்ட புரவிகளும், பெரிய உருவத்திலான சேமக் குதிரைகளும் ஊர்வலமாக வந்து, சாத்தமங்கலம் கிராம மந்தை அருகே இரவில் வரிசையாக வைக்கப்பட்டது. விடிய விடிய நடைபெற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்று புரவிகளுக்கு மாலைகள் அணிவித்து வழிபட்டனர்.