குலசேகரப்பட்டினத்தில் விதவிதமாக வேடமிட்டு வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் மகிஷாசுர சம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாட்களும் நாள்தோறும் பல்வேறு சப்பரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டுத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நோன்பிருந்து மாலையணிந்து காப்புக் கட்டிக் காளி, அனுமன், மாடு உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து குழுவாகவும் தனியாகவும் ஊர்ஊராகச் சென்று காணிக்கை பெற்று வந்தனர். தசரா விழாவின் இறுதி நாளான நேற்றுத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெளிமாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் குலசேகரப்பட்டினத்தில் குவிந்தனர். வேடமணிந்த பக்தர்கள் கோவிலில் காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றியதுடன் மேளதாள முழக்கங்களுடன் பக்திப் பரவசத்தில் நடனமாடி வழிபட்டனர்.

Exit mobile version