காஞ்சிபுரம் வனதுர்கை அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சித்திரை திருவிழா

காஞ்சிபுரம் அருகே உள்ள வனதுர்கை அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள ஆட்டுப்பட்டிகோட்டைபுஞ்சை கிராமத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவையொட்டி, வனதுர்கை அம்மன் கோயிலில் ராகுகால பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து தீமிதி நிகழ்வும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இந்த விழாவில், சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வனதுர்கை அம்மனை வழிபட்டனர்.

Exit mobile version