ஈரோடு மாவட்டம், சிக்ககாஜனுரில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
ஈரோடு, மாவட்டம் தாளவடி அருகே உள்ள சிக்ககாஜனுர் கிராமத்தில் மாதேஸ்வரா கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் நெருப்புக் குண்டம் அமைத்துக் கொண்டாடப்படும் திருவிழா மிகப் பிரசித்தம். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த குண்டம் திருவிழா மாதேஸ்வரன் கோவிலில் தொடங்கியது. அதை முன்னிட்டு, இன்று காலை மாதேஸ்வரா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, சிறப்பு பூஜைகளும் செய்யபட்டது. அதன்பிறகு சுவாமி ஊர்வலம் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தது. இதையடுத்து காலை 8 மணிக்கு விறகுகள் எரிக்கப்பட்டு குண்டம் தயார் செய்யப்பட்டு, பக்தர்கள் அதில் இறங்கினர். இதில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.