சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆருத்ரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில், கோவில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றி வைத்து, நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 9ஆம் தேதி தேரோட்டமும், 10ஆம் தேதி மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.