கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தையடுத்துள்ள பட்டணம் பகுதியில் பள்ளத்து கருப்பணார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில், பெண்கள் பொங்கல் வைத்து கருப்பணாருக்கு படையலிட்டு வழிபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி விருந்து வைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version