கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஏழாம் நாள் உற்சவத்தையொட்டி நடந்த முருகர் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் ஏழாம் நாள் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வாக, 37 அடி உயரமுள்ள முருகர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டார்கள். இந்த தேர்த் திருவிழாவை காண, மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.