காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலில் இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. ராஜகோபுரம் கட்டித்தர பக்தர்கள் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசின் நிதி மற்றும் பொதுமக்களின் நன்கொடை மூலம் கோவில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவின் நிறைவாக இராஜகோபுரம், அகோர வீரபத்திரர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.