ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ரங்க மன்னார், தங்க கருட வாகனத்திலும், ஆண்டாள் தங்க அன்னம் வாகனத்திலும் வீதிஉலா வந்தனர்
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் இந்தாண்டு திருக்கல்யாண விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி ஒவ்வொருநாளும், ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 5ம் நாள் திருவீதி உலா நிகழ்ச்சியில், ரங்க மன்னார், தங்க கருட வாகனத்திலும், ஆண்டாள் தங்க அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்