அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத 3ம் நாள் வழிபாடு

பங்குனி மாதத்தின் மூன்றாம் நாளையொட்டி செங்கத்தில் உள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் ஆலயத்தில் தங்க நிறத்தில் காட்சியளித்த நந்தியம் பெருமானை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், பங்குனி மாதத்தின் 3ம் நாளில் சூரிய ஒளிபட்டு, நந்தியம் பெருமான் தங்க நிறத்தில் காட்சியளிப்பது வழக்கம். இந்தாண்டின் பங்குனி மாத 3ம் நாளையொட்டி, நந்தியம் பெருமான் தங்க நிறத்தில் காட்சியளித்தார். முன்னதாக நந்தி பெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தங்க நிறத்தில் காட்சியளித்த நந்திபெருமான வழிபட்டனர். இதையடுத்து, பக்தர்கள் அனைவருக்கும் மாகா பிரதோஷம் வழிபாட்டு மன்ற அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

Exit mobile version