பழனியில் பக்தர்கள் குவியும் பங்குனி உத்திர திருவிழா

பழனியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் டி.ஐ.ஜி. நிர்மல் குமார் ஜோஷி ஆய்வு செய்தார்

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி கொடியேற்றப்படுகிறது. பங்குனி உத்தர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தர உள்ளனர். இதையடுத்து அங்கு மூவாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் டி.ஐ.ஜி. நிர்மல் குமார் ஜோஷி அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கூட்ட நெரிசலை தவிர்ப்பது குறித்தும் குற்ற சம்பவங்களைக் குறைக்கும் விதமாக உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யபட்டது.

Exit mobile version