2019ம் ஆண்டை சிறப்பாக வழியனுப்பும் வகையில் ட்விட்டரில் #2019in5words என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாக வருகிறது.
2020ம் ஆண்டு பிறக்க இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ளன. அனைவரும் மிகுந்த ஆவலோடு 2020ம் ஆண்டை எதிர்நோக்கி காத்துள்ளனர்.புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தயாராகி உள்ளனர். நிச்சயம் 2019ம் ஆண்டில் நம் அனைவரின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள், சாதனைகள், தோல்விகள் என அனைத்தையும் கடந்து வந்திருப்போம். நம்மை சுற்றிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். இந்நிலையில் 2019ம் ஆண்டின் முடிவை கொண்டாடும் வகையில் இன்றைய தினம் ட்விட்டரில் #2019in5words என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இதனை குறிப்பிட்டு 2019ம் ஆண்டு நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள், நாம் அறிந்திடாத தகவல்கள், புகைப்படங்கள், தங்களுடைய கோபங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.