70 நாட்களுக்கு பிறகு, காஷ்மீரில் இன்று முதல் தொலைபேசி சேவை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 5ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து காஷ்மீரில் பதற்றத்தை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி, இணையதள சேவை உட்பட பல்வேறு தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனையடுத்து சுமார் 70 நாட்களுக்கு பிறகு தனியார் நிறுவனங்களுக்கு செல்பேசி சேவை இன்று முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இணையதள சேவைக்கான தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.