பெண்களை எளிதில் கவரும் கரடி பொம்மை

தற்போது எல்லாம் ஆண்கள் தங்கள் க்ரஷ் மற்றும் காதலிகளை கவருவதற்கு டெடி பியரை மிகப்பெரிய ஆயுதமாகவே பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள் , அப்படிப்பட்ட டெடி பியர் பெண்களுக்கு பிடிக்கக் காரணம் என்ன?

தற்போது உள்ள இளம் பருவத்து ஆண்கள் தங்களது காதலி மற்றும் தோழிகளை கவருவதற்கு பெரும்பாலும் அதிகம் உபயோகிக்கும் ஆயுதம் டெடி பியர் தான், இதற்காக கடை கடையாக ஏறி “ஹலோ, அந்தக் கரடி பொம்மை என்ன வெல?” என்று கேட்டு அதிக விலையாக இருந்தாலும் பேரம் பேசி வாங்கும் ஆண்களை நாம் அதிகம் பார்க்க முடிகிறது.

ஆண்கள் எவ்வளவுதான் அலைஞ்சி திரிஞ்சி அழகான டெடியை வாங்கிக்கொடுத்தாலும் நம்ம புள்ளீங்க தரும் முத்தமும், அணைப்பும் டெடிக்கு மட்டும்தான். இதனாலேயே அதிகப்படியான இளைஞர்கள் டெடிக்கு சூனியம் வைக்கும் அளவுக்குக் கடுப்பாகி இருக்கிறார்கள் என்றுதான் சொல்லனும்.

“எத்தனையோ பொம்மைகள் இருக்கும்போது டெடி மேல மட்டும் பொண்ணுங்களுக்கு ஏன் இவ்ளோ லவ்வு? தூங்கும்போது கூட அத அணைச்சிக்கிட்டேதான் தூங்கணுமா? அப்படி டெடியில என்னதான் இருக்கோ?” என்று புலம்பும் அளவுக்கு நம்ம பசங்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த கரடி பொம்மை.

ஏன் நமக்கு இந்த டெடி பியரை இவ்வளவு பிடித்திருக்கிறது என்று சில நேரங்களில் பெண்களுக்கே கேள்வி எழத்தான் செய்கிறது. அதற்கு விடையளிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன்-பார்பரா பீஸ்-ங்கிற தம்பதி இந்த `டெடி ரகசியத்தை’ தங்களோட “ஆண்கள் ஏன் கேட்பதில்லை” புத்தகத்துல அழகா சொல்லியிருக்காங்க.

புரோஜெஸ்டிரான் ஹார்மோன் பெரும்பாலும் லவ் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது,இந்த ஹார்மோனோட வேலை என்னவென்றால் பெண்களுக்குத் தாய்மை மற்றும் குழந்தையைச் சீராட்டும் உணர்வை ஏற்படுத்துவதுதான்.

இந்த ஹார்மோனின் சுரப்பு குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதிகரிக்குமாம். முக்கியமா குழந்தையோட வடிவம்தான் இந்தச் சுரப்பைத் தூண்டுது. குண்டான, குட்டையான கைகால்கள், உப்பிய மார்பும், வயிறும், சற்று பெரிய தலை மற்றும் பெரிய கண்கள் குழந்தைகளுக்கு உண்டு. இந்த வடிவங்களை ரிலீசர்ஸ்னு சொல்வாங்க.

இந்த வடிவங்களால் உண்டாகும் விளைவுகள் மிகவும் வலுவானவையாக இருப்பதால் இப்படிப்பட்ட வடிவங்கள் ஒரு பொம்மையில் இருப்பதைப் பார்த்தாலும் கூட இந்த ஹார்மோன் பெண்ணின் உடலில் சுரக்கத் தொடங்கிவிடும். இதனால்தான் குழந்தை போன்ற வடிவில் இருக்கும் கரடி பொம்மைகளைப் பார்த்ததும் பெண்கள் அதிக அளவில் கவர்ந்து விடுகிறார்கள்.

இந்தக் காரணத்தால்தான் குழந்தை வடிவில் இருக்கும் குண்டான பொம்மைகள் பெண்களிடம் அதிகம் விற்பனையாகின்றன. ஒல்லியான, நீண்ட வடிவில் உள்ள பொம்மைகளை பெண்கள் அதிகம் விரும்புவதில்லை.

பெரும்பாலும் இந்த ஹார்மோன் சுரப்பு ஆண்களுக்கு இல்லாததால்தான் “இந்தக் கரடி பொம்மைகிட்ட உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு” என்று அவேசப்படுகிறார்கள்.ஆகவே ஆண்கள் கரடி பொம்மையின் மீது கோபப்படுவதை விட்டுவிட்டு தாங்களும் பெண்களைக் கவர நினைத்தால் டெடி பியர் வாங்கி கொடுக்கலாம்.

Exit mobile version