தேயிலைத் தோட்டத்தில் உலா வரும் கரடிகுட்டிகள்

நீலகிரி மாவட்டம் அளக்கரை சாலையில் குட்டிகரடிகள், தாய்கரடிடன்  விளையாடிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

குன்னூர்,கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அளக்கரை-அரவேணு சாலையில் குட்டிகளுடன், தாய்க்கரடி விளையாடி கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஒட்டிகள் அச்சத்துடன் படம் எடுத்தனர். மேலும் கரடி குட்டிகளுடன் சாலையில் உலா வந்ததால் அவ்வழியாக வந்த வாகனஒட்டிகள் வாகனங்களை நிறுத்தினர்.

Exit mobile version