பாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு : பயணிகள் அவதி

பாம்பன் தூக்குபாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். பாம்பன் கடலில் ரயில், கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் தூக்கு பாலம் உள்ளது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக, வரலாற்று சின்னமாக பாம்பன் ரயில் பாலம் அமைந்துள்ளது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு படகுகள் கடந்து செல்வதற்காக பாலம் தூக்கப்பட்டபோது அதிலிருந்து சக்கரம் ஒன்று உடைந்ததாக கூறப்படுகிறது, இதையடுத்து ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, மதுரை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து வந்துள்ள தென்னக ரயில்வே பொறியாளர் குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். பாலத்தில் பழுது சரிசெய்யப்பட்ட பிறகே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version