உலககோப்பை அணியில் இடம்பெற வீரர்களுக்குள் கடும் போட்டி…

2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 106 நாட்கள் உள்ள நிலையில், இந்திய அணியில் இடம் பெற சில வீரர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித், கோஹ்லி, டோனி, தவான், பும்ரா, புவனேஷ் குமார் ஆகியோர் மட்டுமே இப்போதைக்கு உலகக்கோப்பை அணியில் காட்டாயம் இடம் இருப்பதாக தெரிகிறது. மீதுமுள்ள இடத்திற்கு வீரர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், தவானும் களமிறங்க, முதல் வரிசை ஆட்டக்காரராக கேப்டன் விராட் கோஹ்லி களமிறங்குவார்.

இரண்டாம் வரிசை ஆட்டக்காரருக்கு அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அம்பாதி ராயுடு இரண்டாம் வரிசை வீரராக சிறப்பாக செய்யப்படுகிறார் என்று கேப்டன் விராட் கோஹ்லி கூறியிருப்பதால் இரண்டாம் வரிசை வீரராக அம்பாதி ராயுடு களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனிடையே மூன்றாம் வரிசை வீரராக கேதர் ஜாதவ் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அவருடைய பகுதி நேர சுழற்பந்துவீச்சும் (Part Time Spin) சிறப்பாக இருப்பதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. அடுத்த வரிசை வீரராக டோனி இறங்குவார் என்பது உறுதி. டோனி அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால், அணியில் அவரது பங்கு பெரிய பலத்தை கொடுக்கும். அணியில் ஆல் ரவுண்டராக ஹர்டிக் பாண்டியா களமிறங்க அதிக வாய்ப்பு உண்டு.
அணியின் முழு நேர பந்து வீச்சாளர்களாக புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, முஹமது ஷமி இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது.

ஆக அணியில் ஆடும் லெவனில் ரோஹித், தவான், கோஹ்லி (C), ராயுடு, கேதர் ஜாதவ், டோனி, ஹர்டிக் பாண்டியா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், முஹமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா இடம் பெற அதிக வாய்ப்பு உண்டு எனத் தெரிகிறது.

மீதமுள்ள 4 இடங்களுக்கு போட்டி கடுமையாக நிலவுகிறது. 4 இடங்களுக்கு கலீல் அஹ்மது, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், உமேஷ் யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, உலக கோப்பை அணியில் ரஹானே இடம் பேர் வேண்டும் என்று கூறியுள்ளார்.

அணி தேர்வு செய்வதற்காக வருகிற ஆஸ்திரேலிய தொடரில், இந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அதில் சிறந்தவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Exit mobile version