தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில், இரு அணிகள் விளையாடிய இருபது ஓவர் தொடர் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, காந்தி-மண்டேலா கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும், கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களின் பெயர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், விக்கெட் கீப்பர் பணியாற்றி வந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் கழற்றி விடப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக விருத்திமான் சகா சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்: (கேப்டன்) வீராட் கோலி, (துணை கேப்டன்) ரகானே , ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமன் விகாரி, அஸ்வின், ஜடேஜா, விருத்திமான சகா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.
#TeamIndia for 1st Test of @Paytm Freedom Series for Gandhi-Mandela Trophy against South Africa.
Virat Kohli (Capt), Ajinkya Rahane (vc), Rohit Sharma, Mayank Agarwal, Cheteshwar Pujara, Hanuma Vihari, R Ashwin, R Jadeja, Wriddhiman Saha (wk), Ishant Sharma, Md Shami#INDvSA
— BCCI (@BCCI) October 1, 2019