தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜக்கசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அதே பள்ளியில் வரலாறு ஆசிரியர்களாக பணிபுரியும் லட்சுமணன் மற்றும் சின்னமுத்து ஆகிய இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியர் முருகேசன் பார்வையற்றவர் என்பதால் ஆசிரியர்கள் இருவரும் பள்ளிக்கு குடிபோதையில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவியின் செல்போனுக்கு காதல் கவிதைகள், ஆபாசமான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதுடன் மாணவியை மிரட்டியும் உள்ளனர். ஒரு கட்டத்தில், மாணவி இது குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஆசிரியர்களை கைது செய்தனர்.