ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு இடமாற்றம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு இடமாற்றம் செய்ய தயார் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி இன்றைக்குள் பணிக்கு திரும்ப அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி தற்காலிகமாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் விரும்பும் இடத்திற்கு பணி இட மாற்றம் பெறலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுவாக ஆசிரியர்களுக்கு எளிதாக பணியிடமாற்றம் கிடைத்து விடாது. சொந்த ஊருக்கு பணி மாறுதல் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு ஆசிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 இடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த இடங்களுக்கு போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version