மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகின்றன. அதன்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.
மொத்தம் 2 தாள்களை கொண்ட இத்தேர்வில் முதல்தாள் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாள் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
அதன்படி டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 18ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சிபிஎஸ்இயின் ((http://ctet.nic.in)) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 7 ஆண்டுகளுக்கு நாடு முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.