மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் ஆசிரியர்கள்

கோவை அருகே பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, அரசு ஆசிரியர்களே சிற்றுண்டி சமைத்து படிக்க வைக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்று வருகிறது.

கோவை கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறுகிறது. இந்நிலையில் மாணவர்கள் உடல்நலம் தளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக மாலை 4.30 மணியளவில் ஆசிரியர்களும், சத்துணவு சமையலர்களும் சிற்றுண்டி சமைத்து பரிமாறுகின்றனர். குறிப்பாக உப்புமா, காளான் பிரியாணி, தக்காளி சாதம், புளி சாதம் போன்ற ஏதேனும் ஒரு சிற்றுண்டியையோ அல்லது பிஸ்கட் போன்ற பொருட்களையோ தயார் செய்து ஆசிரியர்களே மாணவ, மாணவிகளுக்கு பரிமாறுகின்றனர். இதன்மூலம் இப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகளும் பசியின்றி படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய முடியும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version