ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்- மாவட்ட நிர்வாகம் 

விருதுநகரில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 22 சதவிகித அரசு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒவ்வொரு அலுவலர்களுக்கும் அறிவிப்பு ஆணை அனுப்பப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version