ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முதல் கட்டமாக 7 ஆயிரத்து 728 அரசுப் பள்ளிகளில் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், கற்றல் பணிகள் முறையாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, அனைத்துப்பள்ளிகளிலும், இந்த கல்வியாண்டின் இறுதிக்குள் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில் அரசுப்பள்ளிகள், அங்கு பணியாற்று ஆசிரியர்கள், ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கல்வித்துறை அறிக்கை தயாரித்து வருகிறது.
முதற்கட்டாக, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, 15 கோடியே 30 லட்சம் ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது.